எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோதல்: ஒருவர் படுகாயம்
திருகோணமலை-லிங்கநகர் ஐ.ஓ.சிக்கு சொந்தமான எரிபொருள் நிலையத்தில் இடம்பெற்ற மோதலில் இளைஞரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த மோதல் இன்று (02) காலை இடம் பெற்றுள்ளது.
இதன் போது திருகோணமலை பாலையூற்று பகுதியைச் சேர்ந்த டி.டிலூபர் (23வயது) என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோதல்

கடந்த இரண்டு நாட்களாக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு நீண்ட வரிசையில் நின்ற நிலையில் இன்று(02) ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாகவும் இதனையடுத்து குறித்த இளைஞரை பொல்லால் தாக்கியதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
விசாரணை

இந்த தாக்குதலினால் காயமுற்ற இளைஞர் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குகுதல் நடாத்திய
சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை
எடுத்துள்ளதாகவும் திருகோணமலை தலைமையக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போலீஸ் நிலையத்தில் மயிலை அடிக்கச்சென்ற கோமதி, ஆதாரத்தை காட்டிய மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு எபிசோட் Cineulagam
3ஆம் உலக போரின் தொடக்கமா? அணுகுண்டு வீச தயாராகும் ஈரான்; கிரீன்லாந்திற்கு அடம்பிடிக்கும் டிரம்ப் News Lankasri