எரிபொருள் மோசடி! அதிகாரிகளின் அசமந்த போக்கால் கலவரத்தில் ஈடுப்பட்ட மக்கள்(Video)
மருதானை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மக்கள் இன்று(02) கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மூன்று நாட்கள் மக்கள் வரிசையில் காத்திருந்துள்ளனர்.
மருதானை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இன்று அதிகாலை 3 மணியளவில் எரிபொருள் கொண்டுவரபட்டுள்ளது.
எரிபொருள் மோசடி

இதன்போது 5 மணியளவில் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடையாளம் தெரியாத குழுவினரால் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து பெருந்தொகையான பெட்ரோல் எடுத்து செல்லபட்டுள்ளது.
கலவரம்
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபாடும் அதிகாரிகளும் இது தொடர்பில் நடவடிக்கை எதுவும் எடுக்காத காரணத்தால் மக்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பணியாளர்களை மக்கள் தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரசவ வலியால் துடித்த கனேடிய பெண்: பனிப்புயலை பொருட்படுத்தாமல் இந்திய சாரதி செய்த உதவி News Lankasri
தூங்கவோ சாப்பிடவோ முடியவில்லை... சுவிஸ் இரவு விடுதி உரிமையாளர்கள் மீது பாயும் கொலை வழக்கு News Lankasri