யாழில் கொள்கலன் விபத்து: வீதியெங்கும் வழிந்தோடும் எரிபொருள்
யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் விபத்துக்குள்ளாகி தடம்புரண்டு சரிந்து விழுந்துள்ளன.
இந்த விபத்து இன்று (22.03.2024) அதிகாலை ஏ-9 வீதியில் இடம்பெற்றுள்ளது.
வீதிப் போக்குவரத்து பாதிப்பு
யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்ட அரச பேருந்தை முந்தி செல்ல முற்பட்ட எரிபொருள் தாங்கி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகி எரிபொருள் வீதியில் கொட்டியுள்ளது.
இதன்போது வீதியில் வந்த டிப்பர் வாகனம் கொட்டியிருந்த எரிபொருளில் சறுக்கி விபத்துக்குள்ளானது.

மேலும் அரச பேருந்தில் பயணித்த பயணிகள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் தடம்புரண்ட எரிபொருள் பவுசரில் இருந்த எரிபொருள் வீதி முழுவதும் சிந்திக் காணப்படுவதோடு விபத்துக்குள்ளான வாகனங்களை கனரக வாகனங்கள் மூலம் அகற்றும் பணி முன்னெடுக்கப்பட்டதுடன் வீதியில் வாகனங்கள் சறுக்காது இருக்க மண் பரப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam