யாழில் 25 வருட பழமையான கருவிகளில் புதிய தொழில்நுட்பம்! சிரமத்தில் மாணவர்கள்(Video)
யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள தொழிநுட்பக் கல்லூரியில் துறைசார்ந்த கற்கைநெறிகளை கற்கும் மாணவர்கள் 25 வருட பழமையான கருவிகளை உபயோகித்து புதிய தொழிநுட்பங்களை கற்று வருகின்றனர்.
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள குறித்த கல்லூரியானது பாரம்பரியம் நிறைந்ததும் 75 வருடங்களை தாண்டி இயங்க கூடியதுமான ஒரு கல்லூரியாகும்.
எவ்வித வளர்ச்சிப்படிகளை காணாமலும், மாணவர்களின் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படாமலும், எவ்வித அபிவிருத்தி பணிகளும் மேற்கொள்ளப்படாமலும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தற்போது இயங்கி வருகிறது.
துறைசார் கற்கைநெறிகளுக்கு போதியளவு கருவிகள் இல்லாத நிலையும் அங்கிருக்கிறது. இவ்வாறாக இருக்கும் இந்தக் கல்லூரியை மீள் நிர்மாணிக்க, அங்கு கற்கும் மாணவர்களை அறிவுத்திறன் கொண்டவார்களாக உருவாக்க, கருவிகளை பெற்றுக்கொடுக்க அந்த கல்லூரியின் பழைய மாணவர்கள் உட்பட அனைவரும் முன்வர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பகுதி-1
பகுதி-2

திருப்பி அடிக்கும் இந்தியா., பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் News Lankasri
