பசிலைக் காப்பாற்ற சகாக்கள் அதிரடி வியூகம்!
"நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணையை கொண்டுவருவதற்கு நாம் தயார்.” இவ்வாறு அமைச்சர் எஸ். எம். சந்திரசேன ஊடங்களிடம் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் என எதிரணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு அறிவித்துள்ளார்.
"நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டுக்காகப் பாடுபடுபவர். தற்போதைய நெருக்கடி நிலைமையைச் சமாளிப்பதற்கு அவர் பாடுபட்டுக்கொண்டிருக்கின்றார். பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே அவரின் இலக்கும். இந்நிலையில், அவரின் பயணத்தை க் குழப்புவதற்கு சிலர் முற்படுகின்றனர்.
எனவே, நம்பிக்கையில்லாப் பிரேரணை அல்ல, நிதி அமைச்சருக்கு நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணையே கொண்டுவரப்பட வேண்டும். அதனைக் கொண்டுவருவதற்கு நாம் தயார்" என்றும் அமைச்சர் சந்திரசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.