பிரித்தானியாவில் ஏற்படவுள்ள கடும் குளிர்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரித்தானியாவில் நவம்பர் 6 முதல் 8 வரை பனிப்பொழிவு மற்றும் கடும் குளிர் ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெவான், ஸ்கொட்லாந்து, மற்றும் வேல்ஸ் பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதோடு -2°C வரை வெப்பநிலை குறையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வடமேற்கு ஸ்கொட்லாந்தில் இன்வர்நெஸ், மற்றும் அபர்டீன் ஆகிய இடங்களில் மணிக்கு 2 சென்டிமீட்டர் அளவிற்கு பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குளிரான காலநிலை
மேலும், செயரிட்ஜியன் பகுதியில் -4°C வரையும் ஸ்கொட்லாந்தின் கேர்ங்கார்ம்ஸ் தேசிய பூங்கா பகுதியில் வெப்பநிலை -10°C வரையும் குறையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின் படி, பிரித்தானியாவின் தெற்குப் பகுதிகளில் குளிரான காலநிலை நீடிக்கும் வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |