தேங்காய் நெருக்கடிக்கு தீர்வு : அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
நாட்டில் நிலவும் தேங்காய் நெருக்கடிக்கு தீர்வாக அடுத்த 2 வாரங்களுக்குள் 10 இலட்சம் தேங்காய்களை புறநகர் பகுதிகளுக்கு விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க( Wasantha Samarasinghe)தெரிவித்துள்ளார்.
இதன்படி, சதொச ஊடாக தேங்காய் ஒன்றை 130 ரூபாவிற்கு வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தேங்காய் விலை
மேலும், அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டங்களில் உள்ள தென்னை உற்பத்திகளால் கிடைக்கும் தேங்காய்களே இவ்வாறு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாளாந்தம் 200,000 கிலோகிராம் அரிசியை சதொச ஊடாக சந்தைக்கு இன்று முதல் கட்டுப்பாட்டு விலையில் வழங்க அரிசி ஆலை உரிமையாளர்கள் இணக்கம் வௌியிட்டதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும், தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பராசக்திக்கு வெளிநாட்டில் குவியும் வசூல்.. எவ்வளவு தெரியுமா? அமரன் படத்தை விட அதிகம் தான் Cineulagam
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam