தென்கொரியாவிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள வெளிவிவகார அமைச்சு
தென்கொரியாவிலுள்ள(South Korea) இலங்கையர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா( Arun Hemachandra) தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தென்கொரிய ஜனாதிபதியினால் அங்கு அவசரகால இராணுவச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் அங்கு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
பின்னர் குறித்த சட்டத்தைத் தளர்த்துவதற்கான யோசனை தென்கொரிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டதையடுத்து சட்டத்தைத் தளர்த்துவதாக தென்கொரிய ஜனாதிபதியும் அறிவித்துள்ளார்.
தென்கொரியாவிலுள்ள இலங்கையர்கள்
எனினும் அங்குள்ள பல தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பை அறிவித்துள்ளதுடன் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்நிலையில், அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்தியுள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா தெரிவித்துள்ளார்.
தேவை ஏற்படுமாயின் அங்குள்ள இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன? Manithan

365 நாட்கள் கொண்ட SBI FD -ல் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
