தேங்காய் தட்டுப்பாட்டிற்கு தீர்வு!
நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கு தீர்வாக புதிய கலப்பின தென்னை இனங்களை அறிமுகம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கலப்பின தென்னை இனங்கள் ஊடாக குறுகிய காலத்திற்குள் தேங்காய்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்திட்டம்
இப்புதிய செயற்திட்டத்தின் மூலம் 3 வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் அதிக பலன்களை பெற்றுக்கொள்ள முடியும் என தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நயனி ஆராச்சிகே தெரிவித்துள்ளார்.
அண்மை காலமாக நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்ததுடன் இதனால் பல பிரதேசங்களில் தேங்காய்களின் விலையும் சடுதியாக அதிகரித்திருந்தது.
இந்நிலையிலேயே தேங்காய் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக புதிய திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.





ஆட்டத்திற்கு என்ட் கார்ட் போட்ட மக்கள்.. இந்த வாரம் வெளியேறும் சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா? Manithan

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri
