விலையேற்றம் காரணமாக தேங்காய் கொள்வனவை குறைத்துள்ள பக்தர்கள்
தேங்காயின் விலையேற்றம் காரணமாக கதிர்காமம் ஆலய முன்றலில் தேங்காயை உடைக்கும் பக்தர்களின் எண்ணிக்கை சுமார் 90 வீதத்தால் குறைந்துள்ளதாக பிரதேச வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேங்காயின் விலையைக் கருத்திற் கொண்டு பக்தர்கள் தேங்காய் உடைப்பதை தவிர்ப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
கதிர்காமத்தில் தேங்காய் ஒன்று சுமார் 160 ரூபாவுக்கு அதிக விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பிரதாய நடவடிக்கை
இந்நிலையில், கதிர்காமம் உட்பட தீவின் பல சமய ஸ்தலங்களில் தேங்காய் உடைக்கும் சம்பிரதாய நடவடிக்கை குறைந்துள்ளதுடன் தேங்காய் தட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் தேங்காய் கொள்வனவை குறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் நவகமுவ, செனிகம ஆலயம், தேவந்தர ஆலயம், களனி ஆலயம், வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கண்டி விநாயகர் ஆலய வளாகம், மினுவாங்கொட ஆலயம் போன்ற நாடு முழுவதிலும் உள்ள ஆலயங்களில் தேங்காய் உடைக்கும் நடவடிக்கை குறைந்தாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மனைவியை கொலை செய்ததற்காக சிறையில் இருந்த கணவர்.., திடீரென மனைவியை உயிரோடு பார்த்ததால் நடந்த திருப்பம் News Lankasri

வசீகரிக்கும் அழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
