ஜனாதிபதி கதிரைக்கு மதுபான அனுமதிப்பத்திர இலஞ்சம்: ரணில் தரப்பு வழங்கவுள்ள பதில்
ஜனாதிபதி கதிரையை தக்க வைக்க மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க((Ranil Wickremesinghe) தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி விரிவான அறிக்கையை வெளியிட உள்ளது.
உரிய அனுமதிப்பத்திரங்களை வழங்கும் முறை தொடர்பில் அந்த அறிக்கையில் விரிவாக விளக்கப்பட உள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.
கடந்த தேர்தல் காலத்தில் 361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில் சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே புதிய ஜனநாயக முன்னணி அதனைத் தெரிவித்துள்ளது.
பிமல் ரத்நாயக்க
மேலும், பிமல் ரத்நாயக்க கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மதுபான அனுமதிப் பட்டியலை நாடாளுமன்றத்தில் சமர்பித்திருந்தார்.
இதனிடையே மதுபான விற்பனை உரிமத்துக்கான வருடாந்த கட்டணத்தை அதிகரித்து கடந்த அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் இடைக்கால உத்தரவை உயர்நீதிமன்றம் நேற்று (06.12.2024) பிறப்பித்துள்ளது.
இதன்படி இலங்கை மதுபான அனுமதிப்பத்திரம் வைத்திருப்போர் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதியளித்து மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தீபாவளி பரிசாக வந்த விவாகரத்து நோட்டீஸ்.. சின்ன மருமகள் நடிகையின் அதிரடி- கணவர் உடைத்த ரகசியம் Manithan

கடந்த வாரம் பிரவீன் காந்தி, இந்த வாரம் பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து எலிமினேட் ஆனது இவர்தான்... யார் பாருங்க Cineulagam

சரவெடி வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப் ரங்கநாதனின் டூட் திரைப்படம்... முதல் நாள் வசூல் விவரம்... Cineulagam
