இலங்கைக்கு அடுத்த அடி! உருவாகும் மற்றொரு சிக்கல்?
அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களையும் இயங்க வைக்க முடியாத சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
நிலக்கரியை கொள்வனவு செய்ய டொலர் இல்லாத காரணத்தினால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ.பேர்டினான்டோ கூறியுள்ளார்.
நிலக்கரியை இறக்குமதி செய்ய விலை மனுக்களை கோரி போதிலும் விநியோகஸ்தர்கள் எவரும் விலை மனுக்களை முன்வைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இப்படியான நிலைமையில், நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தில் மின் உற்பத்தியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தொகை கையிருப்பில் இருந்த போதிலும் விரைவில் அது முடிந்து நெருக்கடியான நிலைமை உருவாகலாம்.
இலங்கையின் மின்சார தேவையில் சுமார் அரைவாசி தேவை நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஊடாக பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam