நிலக்கரி மோசடியில் NPP அமைச்சரால் ரூ.15,000 மில்லியன் நஷ்டம் - அரசின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன..!
நிலக்கரி கொள்முதல் மோசடியினால் நாட்டுக்கு சுமார் 15000 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கடந்த காலங்களில் தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதாக நாம் தொடர்ச்சியாக கூறி வந்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.
நிலக்கரி இறக்குமதியில் மோசடி
இந்த கொடுக்கல் வாங்கல்கள் மூலம் ஏற்பட்ட நட்டம் தொடர்பில் நாம் குற்றம் சாட்டிய போது சிலர் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலக்கரி மோசடியினால் ஏற்பட்ட நட்டம் 15000 மில்லியன் ரூபா என்றும், இது மத்திய வங்கி பிணை முறி மோசடியை விடவும் அதிகமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி கொடுக்கல் வாங்கல்களின் மூலம் ஏற்பட்ட நட்டம் 10000 மில்லியன் ரூபா என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தரம் குறைந்த நிலக்கரி காரணமாக கூடுதல் நிலக்கரியை பயன்படுத்த நேரிட்டுள்ளதாகவும், இதனால் 7000 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பாரியளவு நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கும் என கேள்வி எழுப்புவதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் அடுத்தக்கட்ட நகர்வு
குமார ஜயகொடியை ஜனாதிபதி செல்லும் இடங்களுக்கு அழைத்துச் செல்வதாகவும் நாடாளுமன்றில் முன்வரிசை ஆசனம் வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலக்கரி கொள்முதல் நடவடிக்கைகளில் பாரியளவு நட்டம் ஏற்பட்டுள்ளது என்பதை அரச அதிகாரிகள் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதாகவும் அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கும் என்பது குறித்து அவதானம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் நாடாளுமன்றில் அறிக்கையிடப்பட உள்ளதாகவும், அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாக எஸ்.எம். மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan