கிளப் வசந்த கொலை தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட முக்கிய தகவல்
கிளப் வசந்த கொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கைதான 17 பேரில் பெண் ஒருவரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவர் கடந்த 23 ஆம் திகதியும் மற்றைய நபர் நேற்றும் (28) பாணந்துறை - பிங்வத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளப் வசந்த இலக்கு
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கிய காரின் சாரதியும் பிங்வத்த பிரதேசத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையம் ஒன்றின் திறப்பு விழாவில் கிளப் வசந்தவை இலக்கு வைத்து, துப்பாக்கிதாரிகள் இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த மற்றும் பிரபல பாடகி கே. சுஜீவாவின் கணவரான நயன வாசுல ஆகிய இருவரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மர்மமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேன விவகாரம் : போலி பிணையாளர்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam