அதிரடி படை அதிகாரியிடம் சிக்கிய ஆயுதம் - விசாரணையில் அதிர்ச்சித் தகவல்
விசேட அதிரடிப்படையின் பரிசோதகர் ஒருவர் தனது காரின் பின் இருக்கையில் மறைத்து வைத்திருந்த T-56 துப்பாக்கியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அத்துருகிரிய பச்சைக்குத்தும் நிலையத்தில் கிளப் வசந்த உள்ளிட்ட இருவரை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட மற்றுமொரு துப்பாக்கியாக இது இருக்கலாம் என, குற்றப் புலனாய்வுப் பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது.
விசாரணைக்காக துப்பாக்கி அரச ஆய்வுத் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
துப்பாக்கி தோட்டா
பச்சை குத்தும் நிலையத்தில் சிதறி கிடந்த வெற்று தோட்டாக்கள் இந்த துப்பாக்கிக்கு பொருத்தமானதா எனவும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

இந்த துப்பாக்கியை பயன்படுத்தி கம்பஹா ஒஸ்மண்ட் எனப்படும் நபரை கொலை செய்யும் திட்டமும் தெரியவந்துள்ளது.
அத்துருகிரிய தாக்குதல்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தற்போது வெளிநாட்டில் உள்ள கந்த முல்ல ஆராச்சிக்கு நெருக்கமானவர் எனவும் தினேஷ் வசந்தவின் நெருங்கிய உறவினர் எனவும், அவர் கனேமுல்ல சஞ்சீவவின் உதவியாளரான கம்பஹா பெட்டி மஞ்சுவின் சகோதரர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துருகிரிய பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் வசந்த சுரேந்திர பெரேரா அல்லது கிளப் வசந்த மற்றும் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் பாடகி உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 2 நாட்கள் முன்
ரஜினி வீட்டில் பொங்கல்.. ப்ளேட்டை ஸ்பூனால் தட்டி கொண்டாடிய சூப்பர்ஸ்டார்! வீடியோவை பாருங்க Cineulagam