சுவருடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து..! ஆடை நிறுவன உரிமையாளர் பரிதாபமாக உயிரிழப்பு
காலி - ஹினிதும வைத்தியசாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியின் பக்கவாட்டிலிருந்த சுவருடன் மோதி விபத்துக்குள்ளானதில், ஆடை நிறுவன உரிமையாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று(02.06.2026) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆடை தொழிற்சாலை உரிமையாளர் உயிரிழப்பு
விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் படுகாயமடைந்த நிலையில், உடனடியாக மீட்கப்பட்டு உடுகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், அவர் வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்படுவதற்கு முன்னரே ஏற்கனவே உயிரிழந்திருந்தார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழந்தவர் மண்டலபுர பகுதியைச் சேர்ந்த ஆடை நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் எனப் பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பில் ஹினிதும பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் இரவில் நடந்த மர்ம சம்பவம்! திடீரென யாருமின்றி நகர்ந்து சென்ற தொடருந்து - ஆபத்திலிருந்து தப்பிய மக்கள்
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan