காலநிலை மாற்றத்தினால் அதிகம் பாதிக்கப்படும் இலங்கை: வெளியாகியுள்ள தகவல்
காலநிலை மாற்றத்தினால் அதிகம் பாதிக்கப்படும் பத்து நாடுகளில் இலங்கையும் ஒன்று என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன மற்றும் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தின் காலநிலை தொடர்பான முதலாவது அமர்விலேயே அவர்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைப்பதற்கு இலங்கை காலநிலை நாடாளுமன்றம் உள்ளக அமைப்புகளுடனும் ஏனைய நாடுகளுடனும் இணைந்து செயற்படும் என எரான் விக்ரமரத்ன கூறியுள்ளார்.
விவசாயத் துறை பாதிப்பு
இதேவேளை, 2050ஆம் ஆண்டளவில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் காலநிலை மாற்றம் ஒரு சதவீத இழப்பை ஏற்படுத்தும் என்றும் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காலநிலை மாற்றத்தினால் இலங்கையின் விவசாயத் துறை பில்லியன் கணக்கான டொலர்களை இழக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதனால், வெப்ப மண்டல பாதை முயற்சி, காலநிலை நீதி முன்முயற்சி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சி மற்றும் சர்வதேச காலநிலை பல்கலைக்கழகம் போன்ற சுற்றுச்சூழல் நட்பு மேம்பாட்டுத் திட்டங்களில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |