விசுவமடு பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் : நால்வர் மருத்துவமனையில் அனுமதி
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளான கண்ணகிநகர், புன்னைநீராவி, தர்மபுரம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின் போது நால்வர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.
குறித்த சம்பவமானது நேற்று (31.07.2024) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
இதன்போது கண்ணகிநகர்,புன்னைநீராவி,தர்மபுரம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 44, 26 ,30 ,19 ஆகிய வயதுடையவர்கள் படுகாயமடைந்த நிலையில் தர்மபுரம் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.
கிளிநொச்சி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் இவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
மேலும், சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம் News Lankasri

ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்! News Lankasri
