யாசகர்களுக்கிடையிலான மோதல்! கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை
யாசகம் எடுப்பதற்கான பிரதேச எல்லைகளை வகுத்துக் கொள்வது தொடர்பில் மூன்று யாசகர்கள் மத்தியில் நேற்று(7) ஏற்பட்ட வாக்குவாதம், உயிர்ப்படுகொலையில் முடிந்துள்ளது.
இந்த சம்பவம், மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாத்தாண்டிய நகரில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
எல்லைகளை வகுத்துக் கொள்வது தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து கடும் ஆத்திரம் கொண்ட .இரண்டு யாசகர்கள் ஒன்று சேர்ந்து மற்றைய யாசகர் மீது கூரிய ஆயுதம் கொண்டு கடுமையான தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

அதன்போது அவர் கடுமையான காயங்களுக்குள்ளாகிய நிலையில் உயிரிழந்துள்ளார்.
சிலாபம், காக்கப்பள்ளி பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய யாசகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பூசத்தில் குரு பெயர்ச்சி ... அடுத்த 6 மாதங்கள் இந்த ராசியினரின் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி! Manithan