திருகோணமலை எரிபொருள் நிலையத்தில் மோதல்! ஒருவர் படுகாயம்
திருகோணமலை- சீனக்குடா எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்றிரவு இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் திருகோணமலை சங்கம பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞரே காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
தாக்குதலுக்கான காரணம்
கடந்த இரண்டு நாட்களாக நீண்ட வரிசையில் நின்று டோக்கன் பெற்று இன்று பெட்ரோல் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் நின்ற போது அவருக்கு முன்னால் இன்னும் ஒருவர் செல்ல முற்பட்ட வேலை இருவருக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாக்குவாதம் கைகளைப்பாக மாறியதினால் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த இளைஞரை தாக்கிய சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளில் நிறுத்திவிட்டு தப்பி ஓடி உள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சீனக்குடா
பொலிஸார் தெரிவித்தனர்.



