கொழும்பில் எரிவாயு இன்மையால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் (Video)
கொழும்பு 15 - அளுத்மாவத்தை பகுதியில் எரிவாயு இன்மையால் பொதுமக்கள் இன்று(07) எரிவாயு கொள்கலன்களுடன் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த பகுதியில் உள்ள தொடர்மாடிகளில் வாழும் மக்கள் அவர்களுக்கான சமையல் எரிவாயுவினை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
மூன்று மாதங்களாக எரிவாயு இன்மை
மட்டக்குளி - வத்தலை வீதியை மறித்தே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
தொடர்ந்து மூன்று மாதங்களாக தங்களுக்கு எரிவாயு இன்மையால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளகியுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கோட்டாபய அராசாங்கத்தினை பதவி விலகுமாறு கோரியும் நாட்டை சீரான நிலைமைக்கு கொணடுவருமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.



