வடக்கில் காணிகளில் கைவைக்கும் அவுஸ்திரேலியாவின் அத்துமீறலுக்கு சிவில் அமைப்பு எதிர்ப்பு
இலங்கையின் வடமாகாணத்தின் மன்னாரில் கனிய மணல் ஆராய்ச்சி மற்றும் அகழ்வுக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் கரையோர காணிகளை அவுஸ்திரேலிய நிறுவனம் மக்களை ஏமாற்றி கொள்வனவு செய்துள்ளதாக அப்பகுதி சிவில் அமைப்பு ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது.
காணி உரிமையாளர்களுக்கு அதிக விலை கொடுத்து கரையோரத்தில் நிறுவனம் கொள்வனவு செய்துள்ள காணியின் அளவு 3,000 ஏக்கர்களாகும் என மன்னார் பிரஜைகள் குழுவின் உறுப்பினர் ஜேம்ஸ் ஜேசுதாசன் மன்னாரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
பொய்யான வார்த்தைகள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அவுஸ்திரேலிய நிறுவனம் பொய்யான வார்த்தைகளைக் கூறி 3,000 ஏக்கர் காணிகள் இவர்களால் வாங்கப்பட்டுள்ளன. உள்ளூர் மக்களைக் கொண்டு அந்த மக்களுக்கு அதிக விலைகளைக் கொடுத்து இந்த காணியை அகழ்வுப் பணிக்காக சுவீகரித்துள்ளார்கள்.இந்த தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன.
2019 - 2021 காலப்பகுதியில் தலைமன்னார் தொடக்கம் நடுக்குடா வரையான கடற்கரையில் அமைந்துள்ள காணியை அவுஸ்திரேலிய நிறுவனம் அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்துள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த காணிகள் சூரிய சக்தியை உற்பத்தி செய்வதாக கூறி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இதன் பின்விளைவுகளை நாங்கள் ஏற்கனவே கூறியுள்ளோம். 40 அடி ஆழத்திற்கு தோண்டி மண்ணை சேகரிக்கும் போது, கடல் நீர் நன்னீருடன் கலக்கும் போது, தீவில் வாழும் மக்கள், விலங்குகள் மற்றும் வளங்கள் அழிந்துவிடும். சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்வதற்காக இந்த காணிகளை கையகப்படுத்துவதாக கூறி மக்களை ஏமாற்றி இந்த நிலங்களை வாங்கியுள்ளனர்.
போவது என்றால் விரைந்து செல்லுங்கள் அந்த சந்தர்ப்பத்தில் சுற்றாடல், மனித உரிமைகள், கடற்றொழில், விவசாயம் உள்ளிட்ட தொழில்சார் அமைப்புகள், கிராம அமைப்புகள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், மன்னார் பிரஜைகள் குழு தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தெளிவாக கூறியிருந்தது.
மன்னார் தீவில் பாரியளவான மணல் அகழ்வினால், உப்பு நீர் கசிவு ஏற்பட்டு குடிநீர் மாசடைவதோடு, ஆரம்பக் கைத்தொழில்களை வாழ்வாதாரமாகக் கொண்ட பல்லாயிரக்கணக்கான தீவுவாசிகளின் வாழ்க்கை சீர்குலைக்கப்படும் என மன்னார் சுற்றாடல் பாதுகாப்பு அமைப்பு சுட்டிக்காட்டியிருந்தது” என தெரிவித்துள்ளார்.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 17 மணி நேரம் முன்

இரண்டு நாட்களில் விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம்: பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் இன்று முக்கிய அறிவிப்பு News Lankasri
