மீண்டும் ஒருமுறை ஜனாதிபதி கோட்டாபயவினால் மறக்கப்பட்ட தமிழர்கள்

RTI Civil Society upali Aberatna CBA
By Amal Dec 25, 2021 02:23 PM GMT
Report

இலங்கையின் தகவல் அறியும் உரிமை (RTI)ஆணைக்குழுவுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் குறித்து இலங்கையில் உள்ள குடியியல் சமூக அமைப்புகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆணைக்குழுவின், முன்னைய உறுப்பினர்களது பதவிக்காலம் கடந்த செப்டம்பரில் முடிவடைந்ததையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த வாரம் புதிய உறுப்பினர்களை நியமித்தார்.

இந்த ஆணைக்குழுவுக்கு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரின் கீழ் மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைவர் நீதியரசர் ரோஹினி வல்கம, அரசியல் மற்றும் சர்வதேச விவகாரங்கள் திணைக்களத்தின் மூத்த விரிவுரையாளர்- அத்துலசிறி சமரகோன், முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி கிஷாலி பின்டோ ஜயவர்தன, மற்றும் சட்டத்தரணி லியன ஆராச்சிலாகே ஜகத் பண்டார லியன ஆராச்சி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்

எனினும் , தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைவர், தகுதியற்றவர் என்றும், சிறுபான்மையினர் மற்றும் நாட்டின் அனைத்து அதிகாரப்பூர்வ மொழிகளிலும் சரளமாக பேசக்கூடிய தனி ஆட்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவது ஆணைக்குழுவின் அமைப்பிற்கு அவசியமானது என்றும் குடியியல் சமூக அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நிறைவேற்றம், இலங்கையின் சமூக மற்றும் அரசியல் சூழ்நிலையில் ஒரு திருப்புமுனையாகவும் அமைந்தது.

இந்தநிலையில் 20வது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாடாளுமன்ற பேரவையின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதியினால் புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் இந்த ஆணைக்குழுவில், சிறுபான்மையினர் மற்றும் நாட்டின் அனைத்து அதிகாரப்பூர்வ மொழிகளிலும் சரளமாக பேசக்கூடிய தனி ஆட்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக குடியியல் சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன.

எனவே தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் நற்பெயரை நிலைநிறுத்துவதற்கும் அதன் பணியைப் பாதுகாப்பதற்கும், சமூகத்தில் நன்மதிப்பைப் பெற்ற ஒரு நேர்மையான ஒருவரை, ஆணைக்குழுவின் தலைமைப் பொறுப்புக்கு நியமிக்கவேண்டும் என்று குடியியல் சமூக அமைப்புகள் கோரியுள்ளன.

இந்தநிலையில் குறித்த கோரிக்கையில், ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவின் நிறைவேற்றுப் பணிப்பாளர்- நடிஷானி பெரேரா, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கையின் செயல் இயக்குநர்- ரோஹன ஹெட்டியாராச்சி, செயல் இயக்குநர், மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் இயக்குநர் -பாக்கியசோதி சரவணமுத்து, சட்டம் மற்றும் சமூக அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர்- டாக்டர் சகுந்தலா கதிர்காமர், மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் மூத்த ஆய்வாளர் -லயனல் குருகே, , தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர்-மஞ்சுள கஜநாயக்க, ரைட் டு லைஃப் (Right to Life)மனித உரிமைகள் மையத்தின் செயல் இயக்குநர்- பிலிப் திசாநாயக்க, விழுது அமைப்பின் நிர்வாக இயக்குனர்- மைத்ரேயி ராஜசிங்கம், இலங்கையின் உணவு முதல் தகவல் மற்றும் செயல் வலையமைப்பின் தலைவர்-திலக் காரியவசம், தேசிய தேசோதயா பேரவையின் (National Deshodaya Assembly)தேசிய அமைப்பாளர் - நிஷாந்த ப்ரீத்திராஜ் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

இதேவேளை கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரே நாடு ஒரே சட்டம் ஆணைக்குழுவுக்கும் முன்னதாக தமிழ் உறுப்பினர்கள் நியமிக்கப்படாது, பலரின் கோரிக்கைகளுக்கு பின்னர் தமிழ் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.         

மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US