சிஐடி பிரிவுக்குள் இஷாரா செவ்வந்திக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்! விரிவான விசாரணைகள் ஆரம்பம்
கனேமுல்ல சஞ்சீவவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு கொழும்பு குற்றப்பிரிவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்தியமை குறித்து குற்றப்புலனாய்வு பிரிவு சிறப்பு விசாரணையை தொடங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபரின் பிறந்தநாளுக்காக கேக் வெட்டும் திட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், மார்ச் 29 கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) அங்கு சென்று, இது தொடர்பாக அறிக்கையைச் சமர்ப்பித்ததாக பொலிஸ் தலைமையகம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
விரிவான விசாரணை ஆரம்பம்
சம்பந்தப்பட்ட அறிக்கையின்படி, சந்தேகநபரின் பிறந்தநாளுக்காக கேக் வெட்டத்திட்டம் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பிரதி பொலிஸ் மா அதிபர் அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.

சம்பவம் தொடர்பான உடனடி நடவடிக்கையாக, பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில், கொழும்பு குற்றப்பிரிவுப்பொறுப்பதிகாரி உடனடியாக பொலிஸ் களப்படைத் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதற்கமைய, பொலிஸ் சிறப்புப்புலனாய்வுப் பிரிவும் (SIU) சம்பந்தப்பட்ட அதிகாரியின் முறையற்ற மற்றும் சட்டவிரோத நடத்தை குறித்து விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஈரானின் வான்பரப்பிற்குள் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் போர் விமானம்! ஒரே பொய்யை கூறுவதாக மறுப்பு