ஈரானின் வான்பரப்பிற்குள் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் போர் விமானம்! ஒரே பொய்யை கூறுவதாக மறுப்பு
ஈரானின் வான்பரப்பிற்குள் பறந்த அமெரிக்காவின் இரண்டாவது F-35 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரானிய அரசு ஊடகங்களின் படி, மத்திய ஈரான் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த போதே அமெரிக்க அதிநவீன F-35 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
குவைத் முழுவதும் உயர் எச்சரிக்கை நிலை..! பற்றியெரியும் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை - சுட்டுவீழ்த்தப்படும் ஏவுகணைகள்
வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக தகவல்
இந்த தாக்குதலில் போர் விமானம் முற்றாக அழிக்கப்பட்டு வீழ்ந்து நொறுங்கியுள்ளதாகவும், விமானம் பாரிய அளவில் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

குறித்த விமானத்தில் பயணித்த விமானி தொடர்பில் எந்தவொரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என்றும், விமானம் வீழ்ந்து வெடித்த வேகத்தைப் பார்க்கும்போது, விமானி அதிலிருந்து வெளியேறியிருக்க வாய்ப்பில்லை என ஈரானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆறு முறை இதே பொய்
இருப்பினும், தரையில் கிடக்கும் போர் விமானத்தின் சிதைவுகளைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

சம்பந்தப்பட்ட விமானம் அமெரிக்க விமானப்படையின் F-15E ஸ்ட்ரைக் ஈகிள் என்பதையும் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன.
இந்நிலையில், அனைத்து அமெரிக்கப் போர் விமானங்களும் கணக்கில் உள்ளதாகவும், ஈரானின் IRGC இதே பொய்யான கூற்றை குறைந்தது ஆறு முறையாவது கூறியுள்ளதாகவும் அமெரிக்கா மறுத்துள்ளது.
🚫 CLAIM: Iran's Islamic Revolutionary Guard Corps (IRGC) says it downed an "enemy" fighter jet over Qeshm Island in the Strait of Hormuz.
— U.S. Central Command (@CENTCOM) April 2, 2026
✅ FACT: All U.S. fighter aircraft are accounted for. Iran's IRGC has made the same false claim at least half a dozen times. pic.twitter.com/bN7HJdLxEr