கட்டாரில் இருந்து நாடு திரும்பிய இளைஞர் விபத்தில் சிக்கி பலி
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
காத்தான்குடியில் மட்டக்களப்பு நோக்கி ஒரே திசையில் பயணித்த இரு மோட்டார் சைக்கிள்கள் நாவற்குடா பகுதியில் நேற்று புதன்கிழமை (1) இரவு ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இறுதிக்கட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர்! குறிவைக்கப்பட்ட ஈரானின் எஞ்சிய பகுதி - தொடரும் அமெரிக்காவின் எச்சரிக்கை
இருவர் வைத்தியசாலையில்..
காத்தான்குடியில் இருந்து சம்பவ தினமான நேற்று இரவு 8.30 மணியளவில் மட்டக்களப்பை நோக்கி உயிரிழந்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்துள்ளார்.

இதன்போது முன்னால் சென்ற மோட்டர் சைக்கிளின் புகைபோக்கியில் தட்டுப்பட்டதையடுத்து மோதி விபத்துக்கு உள்ளானதில் 22 வயது இளைஞன் சம்பவ இடம்திலே உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்த நிலையல் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்டுள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த இளைஞர் கட்டார் நாட்டில் தொழில் புரிந்து வந்தவர் என்பதுடன் விடுமுறைக்காகத் தாய்நாடு வந்திருந்தவர் எனவும் தனது விடுமுறையை முடித்துக்கொண்டு மீண்டும் நாளை மறுதினம் கட்டார் செல்ல இருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலக சந்தையில் அதிரடியாக உயர்ந்த எண்ணெய் விலை! இலங்கையின் பெட்ரோல் மற்றும் டீசல் தயாரிப்புகளில் சிக்கல்
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
ஒவ்வொரு நாளும் முரண்பாடான பேச்சு- ஈரான் போரில் ட்ரம்ப் நிலைப்பாட்டை விமர்சித்த மேக்ரான் News Lankasri