ஈஸ்டர் தாக்குதலில் மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே.. சிஐடி வெளியிட்ட தகவல்
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில் மூன்றாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சாலே பெப்ரவரி 25, 2026 அன்று கைது செய்யப்பட்டார்.
விசாரணைக்கு வழங்கப்பட்ட அனுமதியின் பேரில் அவர் தற்போது 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார்.
இந்நிலையில், இவ்விடயம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்திற்கு ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது.
புலனாய்வு அறிக்கை
இதன்போது, சாலேவை சந்தேக நபராகக் குறிப்பிடுவதற்கான ஆதாரங்கள் உள்ளதா என்று நீதவான் கேட்டுள்ளார்.

மேலும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.
சந்தேக நபரான சுரேஷ் சாலே தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால், அவரைக் கண்காணிக்க உத்தரவிடுமாறு மேலும் குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்திடம் கோரியது.
இந்த சம்பவம் தொடர்பாக, கிழக்கு மாகாண முன்னாள் பொலிஸ் கண்காணிப்பாளர் மற்றும் இருவர் ஏற்கனவே சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
வவுணதீவில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டது மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடருக்கு முன்னர் நடந்த சாய்ந்தமருது குண்டுவெடிப்பு தொடர்பான முக்கிய தகவல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
இலங்கை அருகே... ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கியால் தாக்குதல் நடத்தியதை அறிவித்த அமெரிக்கா News Lankasri