பொலிஸ் அதிகாரிகளாக இரகசிய அழைப்பில் பணம் கொள்ளை! பொது மக்களுக்கு எச்சரிக்கை
பொலிஸ் அதிகாரிகளாக அடையாளம் காட்டி இணையம் மூலம் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு வங்கிக்கணக்கு தகவல்களை பெற்று பாரிய மோசடியில் ஈடுபடும் கும்பல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மோசடி குறித்து விரிவான விசாரணை நடத்தி வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை நேற்று (08) கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.
மோசடியில் சிக்கிய பலர்
இந்த பாரியளவிலான மோசடியில் சிக்கிய பலர் நாட்டின் பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத்துறையின், கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மோசடி ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலால் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு பதவிகளை வகிக்கும் நபர்களுக்கு இணையம் வழியாக (வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் வழியாக) தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு வங்கிக்கணக்கு தகவல்களை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து அதிக அளவில் பணம் பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பொலிஸ் அதிகாரிகள் போல் வேடம்
இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குழு தங்களை பொலிஸ் அதிகாரிகள் போல் காட்டி பொது மக்களிடம் வங்கி விபரங்களை நுட்பமான முறையில் பெற்று வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை மோசடியாக பெற்றுள்ளனர்.

இந்த கும்பல் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு, ‘முக்கிய நபர்களிடம் அவர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகளிடம் விசாரிக்க வேண்டியிருக்கும். பணிநீக்கம் செய்யப்படலாம், நாங்கள் சொல்வது போல் பணத்தைக் கொடுத்தால், எந்தப் பிரச்சினையும் இருக்காது’ என்று கூறி மோசடி செய்துள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் கடந்த 3 மாதங்களில்1.03 மில்லியன் ரூபாய் மோசடி செய்துள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam