குற்றப்புலனாய்வுத்துறையின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு உயிரச்சுறுத்தல்! நாடாளுமன்றில் சஜித்! (வீடியோ)
நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக அரசாங்கம் பொறுப்புள்ள அறிவித்தல் ஒன்றை விடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை பிரதமமந்திரி, நிதியமைச்சர், அல்லது பொறுப்புக்கள் பிரதியமைச்சர் ஆகியோரில் ஒருவர் இந்த நாடாளுமன்றத்தில் விடுக்கவேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் இன்று டொலர் பிரச்சினை உட்பட்ட பல்வேறு பொருளாதார பிரச்சினைகளால் பொதுமக்கள் பாரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்தநிலையில் அரசாங்கத்தின் சார்பில் எவரும் பொறுப்புள்ள பதிலை இதுவரை வழங்கவில்லை என்று சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தினார்.
இதேவேளை குற்றப்புலனாய்வுத்துறையின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தினார்.
எனவே பாதுகாப்பு அமைச்சர், ஷானி அபேசேகரவுக்கு உரிய பாதுகாப்பை வழங்கவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்தநிலையில் அரசாங்க தரப்பில் பதில் வழங்கிய அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, டொலர் பிரச்சினை தொடர்பாக நாளைய தினம், பதில் வழங்கப்படும் என்று தொிவித்தார்.
அத்துடன் ஷானி அபேசேகரவின் உயிருக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.



