கனடாவில் தீக்கிரையாக்கப்பட்ட தேவாலயங்கள்
கனடாவில் ஏராளமான தேவாலயங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டதுடன், சிவப்பு வண்ணம் பூசப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன.
கனடாவில் தொடர்ந்து கத்தோலிக்க தேவாலயங்களின் கட்டுப்பாட்டின் கீழிருந்த பள்ளிகளில் பயின்ற பூர்வக்குடியின குழந்தைகள் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட விடயம் வெளியாகி வருவதைத் தொடர்ந்தே தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டுவருகின்றன. ஜூன் மாதம் துவங்கி, இதுவரை சுமார் 45 தீவைப்பு சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது.
உண்டுறை பள்ளிகளின் அருகில் சுமார் 1,000 குழந்தைகளின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தே மக்களின் கோபம் தேவாலயங்களை நோக்கி திரும்பியுள்ளது.
சில தொண்டு நிறுவனங்கள், கல்லறைகளைத் தோண்டாமல், ராடார் உதவியுடன் கனடாவின் பல்வேறு பகுதிகளில் தேடத்துவங்கியதைத் தொடர்ந்து, ஆங்காங்கே நூற்றுக்கணக்கில் குழந்தைகள் புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது தொடர்பான மேலும் பல உலக செய்திகளை உள்ளடக்கி வருகிறது இப்படிக்கு உலகம் தொகுப்பு,





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 1 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
