நத்தார் கொண்டாட்டத்தை புறக்கணித்த இயேசுவின் பிறப்பிடம்: இஸ்ரேலுக்கு எதிராக கடும் கண்டனம்
உலகம் முழுவதும் நத்தார் கொண்டாட்டத்தில் மூழ்கி இருக்கும் வேளையில் இயேசு பிறந்த பெத்லகேமில் இந்த ஆண்டு நத்தார் கொண்டாட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது.
காசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெத்லகேமில் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாட்டத்தை கைவிட்டுள்ளனர்.
இஸ்ரேல் நடத்திய தாக்குதல்
பாலஸ்தீனம் முழுவதும் உள்ள தேவாலயங்கள் நத்தார் கொண்டாட்டங்களை இரத்து செய்த நிலையில், "இனப்படுகொலையை இப்போதே நிறுத்துங்கள். இன்று இயேசு பிறந்திருந்தால், அவர் காசாவில் இடிபாடுகளுக்கு அடியில் பிறந்திருப்பார்" என்று ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பெத்லகேமில் உள்ள தனது தேவாலயத்தில் இருந்து பாதிரியார் முன்தர் ஐசக் தனது சபையில் கூறியுள்ளார்.
இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 166 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 384 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 7ஆம் திகதி முதல் இன்று வரை இஸ்ரேலிய தாக்குதல்களில் 20,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |