குற்றச்சாட்டுக்களினால் இங்கிலாந்து திருச்சபையின் தலைவர் பதவி விலகல்
உலகளாவிய எங்கிலிகன் (Anglican) அமைப்பின் ஆன்மீகத் தலைவரும், கேன்டர்பரியின் பேராயரும், இங்கிலாந்து திருச்சபையின் தலைவருமான ஜஸ்டின் வெல்பி (Justin Welby) தமது பதவியை விட்டு விலகியுள்ளார்.
கிறிஸ்தவ கோடைக்கால முகாம்களில் ஒரு தன்னார்வலரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும், தவறான செயற்பாடுகள் பற்றி பொலிஸாரிடம் முறையிட தவறிய குற்றச்சாட்டு காரணமாகவே அவர் தமது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
பதவிக்காலத்துக்கு முன்னைய குற்றச்சாட்டுக்கள்
விசாரணையின் கண்டறியதல்களின்போது, தேவாலயத்தின் பொறுப்புக்கூறல் இல்லாதது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து, 2013 மற்றும் 2024 க்கு இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் இந்த சம்பவங்கள் தொடர்பில் தாம், தனிப்பட்ட மற்றும் நிறுவன பொறுப்பை ஏற்கவேண்டும் என்பதில் தெளிவாக இருப்பதாக பதவியில் இருந்து விலகியுள்ள பேராயர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், 2013 ஆம் ஆண்டில் கேன்டர்பரி பேராயர் ஆனதிலிருந்து, திருச்சபையின் கலாசாரத்தை மாற்றுவதில் வெல்பி முக்கிய பங்கு வகித்ததாக அவரின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள், அவரின் பதவிக்காலத்துக்கு முன்னைய குற்றச்சாட்டுக்கள் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |