பொதுத் தேர்தல் 2024! மாவட்ட ரீதியாக தேர்தல் வாக்கு பதிவு விபரங்கள்
இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று இடம்பெற்றுள்ளது.
அதற்கமைய, இன்று (14) காலை 7.00மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4.00 மணி வரை இடம்பெற்றது.
22 தேர்தல் மாவட்டங்களில், கம்பஹா மாவட்டம் அதிக வாக்காளர்களைக் கொண்ட மாவட்டமாக காணப்படுவதுடன் அந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 81,129 பேர் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொழும்பில் 65 வீத வாக்குகளும்,
களுத்துறையில் 45 வீத வாக்குகளும்,
நுவரெலியாவில் 68 வீத வாக்குகளும்
யாழ்ப்பாணத்தில் 50 வீத வாக்குகளும்,
கிளிநொச்சியில் 46 வீத வாக்குகளும்
முல்லைத்தீவில் 50 வீத வாக்குகளும்
வவுனியாவில் 25 வீத வாக்குகளும்
கண்டியில் 50 வீத வாக்குகளும்
பதுளையில் 67 வீத வாக்குகளும்
காலியில் 50 வீத வாக்குகளும்
இரத்தினபுரியில் 65 வீத வாக்குகளும்
மட்டக்களப்பில் 61 வீத வாக்குகளும்
அம்பாறையில் 37 வீத வாக்குகளும்
திகாமடுல்லயில் 42 வீத வாக்குகளும்
பொலநறுவையில் 65 வாக்குகளும்
ஹம்பாந்தோட்டையில் 60 வீத வாக்குகளும்
மொனராகலையில் 61 வீத வாக்குகளும்
குருணாகலில் 64 வீத வாக்குகளும்
மாத்தளையில் 55 வீத வாக்குகளும்
மாத்தறையில் 64 வீத வாக்குகளும்
புத்தளத்தில் 64 வீத வாக்குகளும்
மன்னாரில் 55 வீத வாக்குகளும்
கேகாலையில் 64 வீத வாக்குகளும்
அனுராதபுரத்தில் 65 வீத வாக்குகளும்
கம்பஹாவில் 52 வீத வாக்குகளும்
திருகோணமலையில் 51 வீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.
கொழும்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 17 இலட்சத்து 65,351 ஆகும். வன்னி தேர்தல் மாவட்டத்தில் குறைந்தளவான வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அந்த எண்ணிக்கை மூன்று இலட்சத்து 6,081 ஆகும்.
இதேவேளை, 2034 வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
பிற்பகல் நிலவரம்
பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பில் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதற்கமைய பிற்பகல் 2.00 மணி வரையான காலப்பகுதியில் சில மாவட்டங்களில் 50 சதவீத வாக்கிற்கு மேல் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கம்பஹா, மன்னார், நுவரெலியா, பதுளை, அனுராதபுரம், இரத்தினபுரி மாவட்டங்களில் அதிகளவான வாக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன.
முதல் இணைப்பு
பத்தாவது நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகிறது.
காலை வேளையில் அதிகளவான மக்கள் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களித்து வருகின்றனர்
வாக்குச்சாவடி
காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்கு பதிவு இடம்பெறும்.
நேர தாமதமின்றி வாக்குச்சாவடிகளுக்கு சென்று அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.ஏ.எம்.எல் ரட்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.