கடந்த 24 மணிநேரத்தில் 400 தேர்தல் முறைப்பாடுகள்
கடந்த 24 மணி நேரத்தில் பொதுத் தேர்தல் தொடர்பாக மொத்தம் 462 புதிய முறைப்பாடுகள் கிடைத்துள்ளன,
இதனையடுத்து தேர்தல் தொடர்பிலான மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3,800ஐ தாண்டியுள்ளது.
2024 செப்டம்பர் 26ம் திகதி முதல் இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.
கிடைத்த 2,616 முறைப்பாடுகள்
இந்த முறைப்பாடுகளில், தேசிய தேர்தல் முறைப்பாட்டு மேலாண்மை மையத்துக்கு கிடைத்த 1,206 முறைப்பாடுகளும், தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மாவட்ட மையங்களுக்கு கிடைத்த 2,616 முறைப்பாடுகளும் உள்ளடங்குகின்றன.
அனைத்து முறைப்பாடுகளும்; சட்ட மீறல்களாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளன, அவற்றில் 23 வன்முறை சம்பவங்களும்; பதிவாகியுள்ளன.
மட்டக்களப்பு
357 தேர்தல் சட்ட விதி மீறல்கள் மட்டக்களப்பில் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான ஜஸ்டினா முரளிதரன் இன்று நண்பகல் 12.00 மணியளவில் இந்துக் கல்லூரி வாக்கெண்ணும் நிலையத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
செய்தி - பவன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |