மன்னாரில் கைப்பற்றப்பட்ட அரசியல் கட்சியொன்றின் உலர் உணவு பொருட்கள்
மன்னாரில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சி ஒன்றினால் வழங்குவதற்கு என கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி உலர் உணவு பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் - யாழ் பிரதான வீதியில் வைத்து அடம்பன் பொலிஸாரினால் வாகனம் ஒன்றில் வைத்து குறித்த உலர் உணவு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது, பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் குறித்த உலர் உணவு பொருட்கள் அரசியல் கட்சி ஒன்றினால் வாக்காளர்களுக்கு வழங்க கொண்டு வரப்பட்டமை தெரியவந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்தநிலையில், குறித்த பொருட்களை பொலிஸார் அடம்பன் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதோடு குறித்த வாகனத்தின் சாரதி, உதவியாளர் உள்ளடங்களாக வாகனத்தில் பயணித்த மூவர் கைது செய்யப்பட்டனர்.

குறித்த வாகனத்தில் சுமார் 290 நபர்களுக்கு வழங்கக்கூடிய வகையில் தயார் செய்யப்பட்ட 5 கிலோ அரிசி பக்கட், 2 கிலோ மா, 1 கிலோ சீனி, 20 கிராம் ரிங்சோ பக்கட் 5 வீதம் தயார் செய்யப்பட்ட கொண்டு வரப்பட்ட நிலையில், பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பொருட்கள் 6 இலட்சத்து 13 ஆயிரத்து 500 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டமை தெரிய வந்துள்ளது. மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் அடம்பன் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களையும், மீட்கப்பட்ட பொருட்களையும் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 12 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam