போதைப்பொருளுடன் கைதானவரை தப்பிச் செல்ல விட்ட சுன்னாகம் பொலிஸார்!
சுன்னாகம் பொலிஸாரால் மல்லாகம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேகநபர் ஒருவர் தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(1) இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நால்வர் ஹெரோயினுடன் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டடனர்.
தேடும் நடவடிக்கை
இவ்வாறு கைது செய்யப்பட்ட நால்வரும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
பின்னர் பிரதான சந்தேகநபரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய பொலிஸார் அனுமதி கோரிய நிலையில் மன்றும் அதற்கு அனுமதி வழங்கியது.

தடுப்புகாவல் விசாரணையின் பின்னர் குறித்த சந்தேகநபரை இன்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றவேளை சந்தேகநபர் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தப்பிச்சென்ற சந்தேகநபரை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.