கத்தியால் குத்தப்பட்டு இளைஞர் படுகொலை!
கத்தியால் குத்தப்பட்டு இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் கேகாலை - புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தில் நேற்று(31) இடம்பெற்றுள்ளது.
கேகாலை, எந்துராபொல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வாக்குவாதம்
மேற்படி இளைஞர் தனது வீட்டினுள் உள்ள ஒலிப்பேழையை அதிக சத்தத்துடன் இயக்கியபோது அயல் வீட்டில் வசிக்கும் நபர் ஒருவர், ஒலிப்பேழையின் சத்தத்தைக் குறைக்குமாறு இளைஞரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் எல்லை மீறியதால் அயல் வீட்டில் வசிக்கும் நபர், இளைஞரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் 76 வயதுடைய அயல் வீட்டில் வசிக்கும் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புலத்கொஹுபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan