வெறுப்பு பிரசாரங்களை கட்டுப்படுத்த வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் கடமை- விடுக்கப்பட்டுள்ள வலியுறுத்தல்
இலங்கையில் மீண்டும் வெறுப்புப் பிரசார பிரிவினர், சமூகங்களுக்கிடையில் மதக் கசப்புணர்வைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக நாட்டின் முக்கிய ஆங்கில nசெய்தி இதழ் ஒன்று ஆசிரியர் தலையங்கத்தை எழுதியுள்ளது.
அண்மையில் பாகிஸ்தானில் ஒரு இலங்கைப் புலம்பெயர்ந்த பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து, அது இலங்கையில் வன்முறையைத் தூண்டுவதை இலங்கை அரசாங்கத்தால் வெற்றிகரமாகத் தடுக்க முடிந்துள்ளது.
எனினும், அதே அரசாங்கம் நாட்டில் இன-மத பிளவுகளைத் தடுக்கும் நோக்கில் ஒரு செயலணியின் தலைவராக நன்கு அறியப்பட்ட மத வெறுப்பாளர் ஒருவரை நியமித்திருப்பது ஆச்சரியமான விடயம் என்றும் ஆங்கில இதழ் குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் மதவெறியைத் தடுக்க வேண்டுமானால், வெறுப்புப் பிரசாரர்களை கடுமையான கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகவும் முக்கியமாகும்.
எனவே இலங்கையின் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு நம்பிக்கை கொடுக்குமாறும் மதவெறி இல்லாத தேசமாக இலங்கையை மாற்றி இலட்சியங்களை மீண்டும் உருவாக்குமாறும் ஆங்கில இதழ் தமது ஆசிரியர் தலையங்கத்தில் கோரியுள்ளது.