முல்லைச்சாரல் பண்பாட்டு மலருக்கான ஆக்கங்கள் கோரல்
முல்லைத்தீவு மாவட்ட கலைஞர்கள் எழுத்தாளர்களிடமிருந்து முல்லைச்சாரல் பண்பாட்டு மலருக்கான ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் கலாசார பேரவையும் இணைந்து வெளியீடு செய்கின்ற முல்லைச்சாரல் மலருக்கான ஆக்கங்களை சமர்ப்பிக்க ஆர்வமுடைய முல்லைத்தீவு மாவட்ட கலைஞர்கள் எழுத்தாளர்கள் தங்களது ஆக்கங்களை எதிர்வரும் மே 15ஆம் திகதிக்கு முன்னர் மாவட்டகலாசார உத்தியோகத்தருக்கு முகவரியிட்டு தபால் மூலம் அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் ஆக்கங்கள், ஆய்வுக்கட்டுரை, கட்டுரை, சிறுகதை, கவிதை, நாடகம், நேர்காணல் மற்றும் பண்டைய வரலாறுகள் இவை யாவும் முல்லைத்தீவு மாவட்ட பண்பாட்டினை பிரதிபலிப்பனவாக அமைய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் - அ. ராயூகரன்