சித்தங்கேணி இளைஞர் விவகாரம்: சித்திரவதை செய்த இடத்தை ஆய்வுசெய்த விசாரணைக் குழு (Video)
பொலிஸ் நிலையத்தில் இருந்து சித்திரவதைக்குள்ளான நிலையில் உயிரிழந்த நாகராஜா அலெக்ஸ் என்ற இளைஞனை சித்திரவதைக்கு உள்ளாக்கிய இடத்தில் இன்றையதினம் (28) ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் அவர்கள் உடனிருக்க, யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொண்ட குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
மேலதிக விசாரணை
இதன்போது உயிரிழந்த இளைஞனுடன் உடனிருந்த மூன்றாவது சாட்சியான மற்றைய இளைஞன், சித்திரவதைக்கு உட்படுத்திய பொலிஸ் நிலையத்திற்குள் உள்ள இடங்களை காண்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இடத்தினை பார்வையிட்டு ஆய்வுகளை முன்னெடுத்த பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவினர் சுமார் ஒன்றரை மணத்தியாலம் வரை விசாரணைகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








