உக்ரைனிடம் சிக்கிய ரஷ்யாவின் சீன உளவாளிகள்.. அம்பலமான சீனாவின் திட்டம்
உக்ரைனில் ரஷ்யாவுக்காக இயங்கி வந்த முதல் இரண்டு சீன உளவாளிகளை, உக்ரைன் பாதுகாப்பு சேவையின் புலனாய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த உளவாளிகள் வழங்கிய வாக்குமூலம் உட்பட்ட காணொளியை உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில், "இவர்களும் மற்ற சீன குடிமக்களும் ரஷ்ய ஆக்கிரமிப்பு இராணுவத்தில் இருப்பது தொடர்பான அனைத்து உண்மைகளையும் நிறுவ நாங்கள் பணியாற்றி வருகிறோம். உக்ரேனிய உளவுத்துறையும் இந்த விடயத்தில் செயல்பட்டு வருகிறது.
150க்கும் மேற்பட்ட சீனர்கள்..
இப்போதைக்கு, ரஷ்யாவால் உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்ட சீன உளவாளிகள்பற்றிய துல்லியமான தரவு எங்களிடம் உள்ளது. உண்மையான எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பதை நாங்கள் அறிவோம்.
The first two captured Chinese citizens. Today, investigators from the Security Service of Ukraine spoke with them. We are working to establish all the facts regarding the involvement of these and other Chinese citizens being part of the Russian occupation army. Ukrainian… pic.twitter.com/PkBpBjI2Qm
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) April 9, 2025
ஆக்கிரமிப்புப் போரின் போது உக்ரைன் பிரதேசத்தில் சீன குடிமக்கள் விரோதப் போக்கில் ஈடுபடுவது போரை விரிவுபடுத்துவதற்கான ஒரு திட்டமிட்ட படியாகும் என்றும், மாஸ்கோ சண்டையை தாமதப்படுத்த வேண்டும் என்பதற்கான மற்றொரு அறிகுறியாகும் என்றும் உக்ரைன் நம்புகிறது.
இந்த பைத்தியக்காரத்தனமான போரில் யார் இறந்தாலும் ரஷ்யா கவலைப்படவில்லை, அவர்களுக்கு போர் தொடர வேண்டும். நாம் அனைவரும் - அனைத்து கூட்டாளிகளும், சர்வதேச உறவுகளில் அனைத்து நேர்மையான பங்கேற்பாளர்களும் - ரஷ்யாவிடம் இருந்து இவர்களைப் போன்றவர்களை பயன்படுத்துவது உட்பட போரை தொடரும் திறனையும் பறிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |