இலங்கைக்கு வரவுள்ள சீன ஆராய்ச்சி கப்பல்
சீன கடல் ஆராய்ச்சிக் கப்பல் “ஷி யான் 6” கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த கப்பலானது இன்று (25.10.2023) வந்தடையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உறுதி செய்துள்ளார்.
இந்தியா அதிருப்தி
சீன கடல் ஆய்வுக் கப்பல் இலங்கை வருகை குறித்து இந்தியா அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சும், வெளிவிவகார அமைச்சும் கப்பலின் வருகைக்கு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தன.
“ஷி யான் 6” என்பது புவி இயற்பியல் ஆய்வுக்காக நில அதிர்வுத் தகவல்களைச் சேகரித்து பகுப்பாய்வு செய்யும் திறன் கொண்ட ஒரு நவீன அறிவியல் ஆராய்ச்சிக் கப்பலென தெரிவிக்கப்படுகிறது.
நாரா நிறுவனத்துடன் இணைந்து இந்த கப்பல் ஆய்வு நடத்த உள்ளதோடு சுமார் 25 நாட்கள் ஆராய்ச்சியில் ஈடுபடும் எனவும் கூறப்படுகிறது.