சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கோவிட் பரவல் - கட்டாயமாக்கப்பட்டுள்ள திட்டம்
சீனாவில் மீண்டும் கோவிட் தொற்று பரவல் அதிகரித்து வருவதை அடுத்து புதிய சுகாதார ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒருகட்டமாக சீனாவில் 3 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஹூபெய், ஃபுஜியான், ஹெனான், ஸீஜியாங், ஹூனான் ஆகிய மாகாணங்களில் இந்த தடுப்பூசி திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன்படி 3வயதுக்கும் 17 வயதுக்கும் உட்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.
இதுவரை சீனாவில் 223 கோடி பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தொிவிக்கின்றன.
சீனாவில் தமது பிள்ளைகளுக்கு கோவிட் தடுப்பூசிகளை செலுத்த பெற்றோர் தயக்கம் காட்டி வருகின்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும் அரசாங்கத்தின் கண்டிப்பான நடைமுறை காரணமாக சிறுவர்களுக்கான தடுப்பூசித்திட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்படும் என்று எதிா்ப்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி...
சீனாவின் 11 மாகாணங்களில் டெல்டா மாறுபாடு - மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்ட மரதன் போட்டி