சீனாவின் 11 மாகாணங்களில் டெல்டா மாறுபாடு - மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்ட மரதன் போட்டி
கோவிட் தொற்றுக்களின் அதிகரிப்பு காரணமாக சீன பீய்ஜிங் மரதன் போட்டி மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் உயர்மட்ட சுகாதார அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அங்கு புதிய தொற்றுக்கள் பரவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சீனாவில் இதுவரை 11 மாகாணங்களில் 133இற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனத்தகவல்கள் தொிவிக்கின்றன.
இந்த புதிய கோவிட் தொற்று பரவல், சீனாவில் 2022இல் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் தொடர்பில் கவலையை எழுப்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
1981 முதல் ஆண்டுதோறும் நடத்தப்படும் பீய்ஜிங் மரதன் சீனாவின் மிகப்பெரிய உள்ளூர் விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றாகக கருதப்படுகிறது.
இந்த போட்டி பாரம்பரியமாக தியானன்மென் சதுக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு பீய்ங்கின் ஒலிம்பிக் பூங்கா சதுக்கத்தில் முடிவடைகிறது.
அக்டோபர் 31ஆம் திகதியன்று நடக்கவிருந்த இந்த மரதனில் சுமார் 30,000 பேர்
பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.