இந்தியாவிற்கு பதிலடி வழங்கிய சீன விமானங்கள்! அதிரும் காஷ்மீர் களமுனை
பாகிஸ்தானின் மீதான இந்தியா மேற்கொண்டுவரும் தாக்குதலுக்கு பதிலடி வழங்கிய பாகிஸ்தான், சீனாவில் தயாரிக்கப்பட்ட விமானங்களைப் பயன்படுத்தி ஐந்து இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீருக்குள் "பயங்கரவாத" தளங்கள் என்று கூறி இந்தியா வான்வழித் தாக்குதல்களை நடத்திய பின்னர், இந்திய ஜெட் விமானங்களை - மூன்று பிரான்ஸ் தயாரிப்பான ரஃபேல் விமானங்கள், ஒரு mic -29 மற்றும் ஒரு su -30 போர் விமானங்களை - சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
பாகிஸ்தானின் கூற்றுகளுக்கு இந்தியா எந்த பதிலும் அளிக்கவில்லை. எந்த இழப்புகளையும் உறுதிப்படுத்தவில்லை.
பிரான்ஸ் அதிகாரிகள்
பாகிஸ்தான் ஒரு ரஃபேல் விமானத்தை சுட்டுவீழ்த்தியதாகவும், மேலும் ஏதேனும் சுட்டுவீழ்த்தப்பட்டதா என்பது குறித்து பிரான்ஸ் அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும் அந்நாட்டு உளவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரின் உண்மையான எல்லையில் பாகிஸ்தான் ஆயுதப்படைகள் 40 முதல் 50 இந்திய வீரர்களைக் கொன்றுள்ளதாக அந்நாட்டு தகவல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நடைமுறை எல்லையில் உள்ள அவர்களின் (இந்திய) இராணுவ நிறுவல்களை நாங்கள் தகர்த்தெறிந்தோம், என்று பாகிஸ்தானின் சுட்டிக்காட்டியுள்ளது.
புதன்கிழமை அதிகாலை பஞ்சாப் மற்றும் பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீர் மீது இந்தியா நடத்திய கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து, பதிலடி கொடுப்பதாக அந்நாடு சபதம் செய்துள்ளது.
பாகிஸ்தான் பாதுகாப்பு வட்டாரங்கள், இந்திய விமானப்படையின் ஐந்து ஜெட் விமானங்களையும், பல ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தியதாகக் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
