சீன அணுசக்தி நீர்மூழ்கி கப்பலில் விபத்து: 55 பேர் பலி
அமெரிக்காவின் நீர் மூழ்கிக் கப்பல்களை முடக்குவதற்காக அனுப்பி வைக்கப்பட்ட சீனக் கடற்படையின் அணு ஆயுத நீர் மூழ்கிக்கப்பல் விபத்துக்குள்ளானதாக பிரித்தானிய உளவு அமைப்பு தெரிவித்திருப்பது சர்வதேச நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தக் கப்பலில் இருந்த 55 கடற்படை வீரர்களும் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், இதனை சீனா மறுத்திருக்கிறது.
அண்டை நாடுகளை ஆக்கிரமிக்கும் நோக்கத்தை கொண்டுள்ள சீனா இந்தியா, ஜப்பான், தைவான் உள்ளிட்ட நாடுகளுக்கு சொந்தமான பகுதிகளை தங்கள் பகுதி என்று இப்போது வரை உரிமை கோரி வருகிறது சீனா.
பிரித்தானிய உளவு அமைப்பு
அதுமட்டுமின்றி, உலக அளவில் கடல் பரப்பிலும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கையில் சீனா இறங்கியுள்ளது. எனினும் சீனாவின் இந்த முயற்சிக்கு இந்தியாவும், அமெரிக்காவும் முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் நீர்மூழ்கிக் கப்பல்களை ஒரே இடத்தில் சிக்க வைப்பதற்காக சீனா சார்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் ''093-417' என்ற ராட்சத அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல் அனுப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன்போது கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதியன்று திடீரென இந்த நீர்மூழ்கிக் கப்பலின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் கப்பலுக்குள் ஒட்சிசன் வாயு செல்வது தடை செய்யப்பட்டதாகவும், இதனால் அதற்குள் இருந்த 55 கடற்படை வீரர்களும் உயிரிழந்ததாகவும் பிரித்தானிய உளவு அமைப்பு தனது ரகசிய அறிக்கையில் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
    
    சனல் 4வை பற்றி பேசாதீர்கள்: எனது முடிவு இது: ஜெர்மனியில் ஊடகவியலாளரை எச்சரித்த ரணில் (முழுமையான தமிழாக்க காணொளி)
கடலுக்கடியில் அணு ஆயுத நீர் மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளாவதாக கூறப்படுவதால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன.
ஆனால், இந்த செய்தியை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
    
    
    
    
    
    
    
    
    
    திடீரென பழனிவேல் செய்த காரியம், கண்ணீர்விட்டு அழுத கோமதி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam