23 இந்திய இராணுவ வீரர்கள் மாயம்! மீட்புப் பணிகள் தீவிரம்
இந்திய - சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 23 இந்திய இராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளதாக இந்திய இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிக்கிம் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள லோனக் ஏரி பகுதியில் நேற்று (03.09.2023) நள்ளிரவில் ஏற்ப்பட்ட மேக வெடிப்பால் டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இத்திடீர் வெள்ளத்தில் இராணுவ வீரர்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேடும் பணி தீவிரம்
மேலும், பல இந்திய இராணுவ தளங்கள் மற்றும் பல இராணுவ வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் இதன் காரணமாக படையினர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து குவாஹாட்டி இராணுவ மையத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், தீஸ்டா ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இராணுவ வீரர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை வெள்ளப்பெருக்கில் சிக்கி ஐந்து பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW | 
    
    
    
    
    
    
    
    
    
    Bigg Boss 9: தெறிக்க விட்ட திவ்யாவையே வாயடைக்க வைத்த திவாகர்... எதிர்பாராத பிக் பாஸ் ப்ரொமோ Manithan
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam