ஸ்கார்பரோ ஷோல் பகுதியில் சீன இராணுவத்தின் கடற்படைப் போர் விமானங்கள் மூலம் பயிற்சி
சர்ச்சைக்குரிய ஸ்கார்பரோ ஷோல் கடல் பகுதிக்கு அருகில், சீன இராணுவமும் சீனக் கடலோரக் காவல்படையும் இணைந்து கூட்டு வான் மற்றும் கடற்படைப் போர் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளதாகச் சீன அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சீனா 'ஹுவாங்யான் தாவோ' என்றும், பிலிப்பைன்ஸ் 'பஜோ டி மசினோக்' என்றும் அழைக்கும் இப்பகுதியில் இந்தப் பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இராணுவப் பயிற்சிகள்
பிராந்திய அமைதியைக் குலைக்கும் 'சில நாடுகளின்' நடவடிக்கைகளுக்கு எதிரான அவசியமான பதிலடி இதுவெனச் சீனா தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் தரப்பு நிர்ணயித்த பிராந்தியக் கடல் எல்லை அடிப்படைக் கோடுகள் சட்டவிரோதமானவை எனச் சீனா குறிப்பிடுகிறது.

மேலும், 2025 செப்டெம்பரில் நிறுவப்பட்ட 'ஹுவாங்யான் தீவு தேசிய இயற்கை காப்பக' நிர்வாகத்திற்கான புதிய கொள்கையைச் சீனா வெளியிட்டுள்ளது.
இதன்படி, அனுமதியற்ற கடற்றொழில், சுரங்கத் தொழில்கள், பவளம் அல்லது மாபெரும் கிளிஞ்சல்களை அகற்றுதல் போன்ற அனைத்துச் செயல்பாடுகளும் தடை செய்யப்பட்டுள்ளதுடன், மீறுபவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.