கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீனப் பிரஜை கைது
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளுடன் சீன நாட்டுப் பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (11.4.2026) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுங்க நடவடிக்கை ஒன்றின் போது, சுங்க அதிகாரிகளினால் இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 35 வயதுடைய சீன நாட்டு வியாபாரி எனக் குறிப்பிடப்படுகின்றது.
அபராதம்
அத்துடன், அவர் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து இன்று அதிகாலை 12.50 மணியளவில் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளுக்குள் 39 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா பெறுமதியான 26,100 சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை சுங்க அதிகாரிகளின் முறையான சோதனையின் போது கண்டறியப்பட்டது.
மீட்கப்பட்ட சிகரெட் தொகுதி அரசுடைமையாக்கப்பட்டதுடன், சந்தேக நபருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri