அநுரவுடன் இணைந்து செயற்பட தயாராகும் சீனா
இலங்கையின் நிலையான பொருளாதாரத்தில் ஆக்கப்பூர்வமான பங்கை வகிக்க தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
அத்துடன், நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடாத கொள்கைகளை கடைப்பிடித்து, அதன் இறையாண்மைக்கு மதிப்பளித்து, ஆக்கப்பூர்வமான பங்கை ஆற்ற தயாராக உள்ளதாகவும் சீனா குறிப்பிட்டுள்ளது.
புதிய நிர்வாகம்
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் (Lin Jian ) இந்த கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
செப்டெம்பர் 21ஆம் திகதி தேர்தல் சுமுகமாக நடைபெற்றதாகவும், ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், கடனைத் திருப்பிச் செலுத்துவதில் இலங்கையின் உறுதிப்பாட்டில் சீனாவின் நம்பிக்கை பற்றிக் கேட்ட போது, சீனாவும் இலங்கையும் நீண்டகால நட்புறவைப் பகிர்ந்துகொள்வதாக லின் வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரம், ஜனாதிபதி திஸாநாயக்க மற்றும் அவரது புதிய நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற தாங்கள் தயாராக உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
